கேரளா ஸ்டைல் வட்டலப்பம் செய்வது எப்படி?

வட்டலப்பம் என்பது இலங்கை, கேரளாவில் பிரபலமான ஒரு ருசியான பதார்த்தமாகும். தேங்காய் பால், வெல்லம், முந்திரி கொண்டு சுவையான வட்டலப்பம் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: தேங்காய்ப்பால், முட்டை, ஏலக்காய்பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை, சர்க்கரை, நெய்

10 முட்டைகளை எடுத்து உடைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயை துறுவி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடித்து வைத்த முட்டையுடன் தேங்காய் பால், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்பொடி சேர்த்து நன்கு அடித்துக் கலக்க வேண்டும்.

Various Source

ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் அடித்து வைத்த கலவையை ஊற்ற வேண்டும்.

குக்கரில் தண்ணீர் வைத்து அதில் பாத்திரத்தை வைத்து குக்கரை மூடி 30 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

நன்றாக வெந்த பிறகு அதை எடுத்து பாதாம், முந்திரி, திராட்சை தூவி பறிமாறினால் சுவையான வட்டலப்பம் தயார்.