1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (18:14 IST)

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை காவல்.. கோவை ஜே.எம்.4 நீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் என  கோவை ஜே.எம்.4 நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார், ஒரு நாள் காவல் முடிந்ததும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு இந்த காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவரது காரில் கஞ்சா இருந்ததாக இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் அளித்த புகார், பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அளித்த புகார் என அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்தத்தை அடுத்து 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
அதுமட்டுமின்றி சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் இப்போதைக்கு ஜாமீனில் வெளியே வர முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் மே 28ஆம் தேதி வரை காவல் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவர் மீதான அடுத்தடுத்த வழக்குகளில் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran