சுவையா சாப்பிடலாம் சூப்பரான வெஜிடபிள் பனீர் கட்லெட்!

பாலில் இருந்து செய்யப்படும் பனீர் வைத்து விதவிதமான பல உணவுகளை செய்யலாம். அந்த வகையில் பனீர், காய்கறிகளை கொண்டு சூப்பரான சுவையான வெஜிடபிள் பனீர் கட்லெட் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பனீர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், குடை மிளகாய், சோள மாவு, ப்ரெட் தூள்

மசாலாப் பொருட்கள்: பூண்டு, மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், தனியா தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு

உருளைக்கிழங்கை நன்றாக அவித்து தோல் உரித்து மாவாக மசித்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, வெங்காயம் வதக்கி அதனுடன் நறுக்கிய பீன்ஸ், கேரட், கோஸ், குடை மிளகாய் போட்டு வதக்கவும்

Various Source

பின்னர் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து மசாலாக்களை சேர்த்து கிளறி, சீவிய பனீர், கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்

சோள மாவை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

வதக்கி எடுத்த காய்கறி பனீர் மசாலாவை உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

தட்டிய கட்லெட்டை சோள மாவில் முக்கி எடுத்து ப்ரெட் தூளில் வைத்து எடுத்து கடாயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் வெஜ் பனீர் கட்லெட் தயார்.

Various Source