சுனாமி போல் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும்: ஏஐ குறித்து ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர்
ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தால் வேலைவாய்ப்பில் சுனாமி போல் பாதிப்பு ஏற்படும் என்று ஐ எம் எஸ் நிர்வாக இயக்குனர் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதை அடுத்து மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதற்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று இன்னொரு பிரிவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா என்பவர் உலக அளவில் சுனாமி போன்ற தாக்கத்தை வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் வெகு விரைவில் நடைபெறும் என்றும் அதற்கு மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran