1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 14 மே 2024 (20:51 IST)

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவா..? அட நம்பவே முடியல..!!

Modi
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என்றும் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.
 
இதில் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை. அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை. மோடியின் பிரதான வருமானமாக அவருக்கு அளிக்கப்படும் சம்பளமே உள்ளது.
 
மோடியிடம் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. அந்த மோதிரங்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். மோடியிடம் ரொக்கமாக ரூ.52 ஆயிரம் 920 உள்ளது. பிரதமர் மோடி தனது வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ.2.85 கோடி டெபாசிட் செய்துள்ளார். 


பிரதமர் மோடியிடம் 2019-ல் ரூ.2.51 கோடியாக இருந்தது. தற்போது ரூ.3.02 கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் மோடியின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் மட்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.