1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The rain is going to cool down 14 districts by night! In which districts?

இரவுக்குள் 14 மாவட்டங்களை குளிர்விக்க போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

Chennai Rain
தமிழகத்தில் கடந்த வாரம் முதலாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் மே மாதம் அக்கினி வெயில் தொடங்கியிருந்தாலும் ஆங்காங்கே மழையும் பெய்து வருவதால் மக்கள் நிம்மதியில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முன் தினம் முதலாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
பாலியல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்.! பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை..!!