திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 14 மே 2024 (15:36 IST)

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு.! மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு..!!

LTTE
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், 2009ல் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின், இலங்கையில், அவர்களது நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.