1. இதர வாசிப்பு
  2. »
  3. ‌சிற‌ப்புக‌ள்
  4. »
  5. 2010 ஒரு பா‌ர்வை
  6. 2010ல் உலகம்: ஒரு பார்வை

2010ல் உலகம்: ஒரு பார்வை

2010 உலகம் செய்திகள் நிகழ்வுகள்
தீவிரவாத ஒழிப்பு குறித்த உலக தலைவர்களின் பேச்சுக்கள், பருவ நிலை மாற்றம் குறித்த கவலைகள், கட்டுப்படுத்த முடியாமல் தொடரும் குண்டுவெடிப்புகள், விபத்துக்கள் போன்ற வழக்கமான நிகழ்வுகள், தலைவர்கள் சந்தித்த நெருக்கடிகள், நெகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சி தருணங்கள் என 2010 ஆம் ஆண்டை திரும்பி பார்க்க வைக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள் கீழே:

ஜனவரி:

பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை மரணம்!

கொழும்பில் தனி இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை ‌திருவேங்க‌டம் வேலுப்பிள்ளை (86), மரணமடைந்தார்.

ஹைட்டி நிலநடுக்கம்: பல்லாயிரக்கணக்கில் உயிர்ப் பலி!

வட, தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையிலான கடற்பகுதியில் உள்ள ஹைட்டி தீவு நாட்டைத் தாக்கிய பயங்கர நில நடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சிறிலங்க அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி!

சிறிலங்க அதிபர் தேர்தலில் பொன்சேகாவை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ச 57.88% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

பிப்ரவரி:

சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது!

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளப‌தி சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஒபாமா-தலாய் லாமா சந்திப்பு!

புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

மார்ச்:

4 பேருடன் சவூதி எண்ணெய் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தல்!

சவூதிக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை, 14 சிப்பந்திகளுடன் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.

தங்கச் சுரங்க‌த்த‌ி‌ல் ‌விப‌த்து: 200 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான சியர்ரா ‌சியோ‌னி‌‌ல் உ‌ள்ள த‌ங்க‌ச் சுர‌ங்க‌த்த‌ி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌திடீ‌ர் ‌நில‌‌‌ச் ச‌ரிவ‌ி‌ல் சுமா‌ர் 200 தொ‌‌ழிலாள‌ர்‌க‌ள் ப‌லியாயினர்.
ஏப்ரல்:

ஐஸ்லாந்து எரிமலை வெடித்து வானம் புகை மயம்; ஐரோப்பாவில் விமானங்கள் ரத்து!

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை வெடித்ததில் கிளம்பிய படு பயங்கரமான சாம்பற்புகையால் வான்வெளி முழுதும் புகை மயமாக காட்சியளிக்கிறது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பாவில் சுமார் 4000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மே:

இ‌ங்‌கிலா‌ந்‌து தேர்தலில் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி அ‌திக இட‌‌த்தை கை‌ப்ப‌ற்‌‌றியது!

இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் நடைபெ‌ற்ற நாடாளும‌ன்ற தே‌ர்த‌லி‌ல் எ‌‌தி‌ர்‌க்க‌‌ட்‌சியான கன்சர்வேடிவ் கட்சி‌ 307 இட‌ங்களை கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளது. தொ‌ழிலாள‌ர் க‌ட்‌சி‌க்கு‌ 255 இட‌ங்கு‌ம், லிபரல் ஜனநாயகக்கட்சி‌க்கு 59 இட‌ங்கு‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது.

மலேசியாவில் இருந்து கொழும்பு சென்றார் பா‌ர்வ‌திய‌ம்மா‌ள்!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து இலங்கை வந்தார்.

ஜூன்:

கொழும்பு ஐஃபா விழா முழு தோல்வி!

கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும்(IIFA), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI)யும் இணைந்து நடத்தில் ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்தது.

கிர்கிஸ்தான் கலவர‌த்திற்கு 1800 பேர் பலி!

‌கி‌ர்‌கி‌ஸ்தா‌னி‌ல் நட‌ந்த கலவர‌த்‌தி‌ல் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 1800 ஆக உய‌‌ர்‌ந்தது.

ஜூலை:

நேபாள பிரதமர் மாதவ்குமார் ராஜினாமா!

நேபாள பிரதமர் மாதவ்குமார் தனது பத‌வியை ராஜினாமா செ‌ய்தா‌ர்.

க‌ரிய‌மில வா‌யுவை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் முடிவு எ‌ட்ட‌ப்படுவது கடின‌ம்: ஃபே‌சி‌க் நாடுக‌ள்!

ஐ.நா சா‌ர்‌பி‌ல் நடைபெற உ‌ள்ள பருவ‌நிலை மாநா‌ட்டி‌ல் க‌ரிய‌மில வா‌யுவை க‌‌ட்டு‌ப்படு‌த்துவது தொட‌ர்பாக முடிவுக‌ள் எ‌ட்ட‌ப்படுவது கடின‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா உ‌ள்‌ளி‌ட்ட ஃபே‌சி‌க் நாடுக‌ள் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன.

ஆகஸ்ட்:

பாகிஸ்தான்: வெள்ளத்தினால் 32 லட்சம் பேர் பாதிப்பு!

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் 32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

ஹிரோஷிமா நினைவு நிகழ்ச்சியில் யு.எஸ்., அணு ஆயுத நாடுகள் பங்கேற்பு!

ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்டதன் 65 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு அணு ஆயுத நாடுகளின் பிரதிநிதிகள் முதன்முறையாக பங்கேற்றனர்.

செப்டம்பர்:

அமெரிக்க விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட பாக். இராணுவத்தினர்!

விமான சிப்பந்தியை கேலியாக பேசிய பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழுவினரை அமெரிக்க காவல்துறையினர் தடுத்து வைத்து கடுமையாக விசாரணை மேற்கொண்டனர்.

ஆஸி.: ஜூலியா கில்லர்ட் மீண்டும் ஆட்சியை பிடித்தார்!

ஆஸ்ட்ரேலியாவில் பிரதமர் ஜூலியா கில்லர்ட் தலைமையில் தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.

அக்டோபர்:

சிறையில் அடைக்கப்பட்டார் சரத் பொன்சேகா!

சிறிலங்க இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக அந்நாட்டு இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.

சீன அரசின் எதிர்ப்பாளருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சீன அரசின் எதிர்ப்பாளரும், அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் கோரிப் போராடி வருபவருமான லியூ ஜியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர்:

மியானமர்: விடுதலையானார் ஆங் சான் சூ கி!

நீண்ட காலமாக வேட்டுச் சிறையில் வாடிய மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கி ஒருவழியாக இன்று விடுதலையானார்.

தென்கொரியா தீவு மீது வட கொரியா திடீர் குண்டுவீச்சு தாக்குதல்!

தென்கொரியாவில் உள்ள எல்லையோர தீவுப்பகுதியை குறிவைத்து, வட கொரியா இன்று குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

லண்டன் வந்த ராஜபக்சவை எதிர்த்து தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!
இலங்கை அதிபர் ராஜபக்சவின் வருகையை எதிர்த்து லண்டன் விமானநிலையத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டிசம்பர்:

தமிழர்கள் எதிர்ப்பால் லண்டனில் ராஜபக்ச நிகழ்ச்சி ரத்து!

ல‌ண்ட‌ன் வா‌ழ் த‌‌மிழ‌ர்க‌ளி‌ன் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பை அடு‌த்து ‌இல‌‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்ச நிக‌ழ்‌ச்‌சியை ஆ‌க்‌ஸ்போ‌ர்‌டு ப‌ல்கலை‌க்கழக‌ம் ர‌த்து செ‌ய்து‌ள்ளது.

விக்கிலீக்ஸ் அசாங்கா பிணையில் விடுதலை!

சுவீடனில் இரண்டு பெண்கள் கொடுத்த பாலியல் புகார்கள் தொடர்பாக லண்டனில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.