மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...
மனிதர்கள் நூறு வருடங்கள் தாண்டி வாழ முடியுமா என்கிற ஆராய்ச்சி பல வருடமாகவே நடைபெற்று வருகிறது. ஏனெனில் பொதுவாகவே மனிதர்களின் சராசரி வயது 65 ஆகவே இருக்கிறது. ஆனால், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் 100 வயது தாண்டி பலரும் வாழ்கிறார்கள்.
அப்படியே இருந்தாலும் 115, 120 வயதை தாண்டி அவர்கள் வாழ்வது இல்லை. சமீபத்தில் கூட 100 வயதிற்கு மேல் மனிதர்கள் வாழ முடியுமா என்கிற ஆராய்ச்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா என்கிற ஆராய்ச்சியில் முன்னாள் ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் நிக் பாஸ்ட்ரோம் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்..
வயது முதிர்வு தடுக்கப்பட்டால் மனிதர்கள் 1200 முதல் 1400 வரை வாழலாம் என அவர் தெரிவித்திருக்கிறார். 20, 25 வயது ஆரோக்கியமான இளைஞர்களின் ஆண்டு. இறப்பு விகிதம் 0.07 சதவீதம். வாழ்நாள் முழுவதும் இது மாறாமல் இருந்தால் 1200 வருடங்களுக்கும் மேல் வாழ்வது சாத்தியம் என அவர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.