1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

கிர்கிஸ்தான் கலவர‌ம்: பலி 1800 ஆக உயர்வு

கிர்கிஸ்தான் கலவரம்
‌கி‌ர்‌கி‌ஸ்தா‌னி‌ல் நட‌ந்த கலவர‌த்‌தி‌ல் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 1800 ஆக உய‌‌ர்‌ந்து‌ள்ளது.

ர‌‌ஷ்யாவில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் கிர்கிஸ் இனமக்களுக்கும், உஸ்பெக் இனமக்களுக்கும் இடையே நடந்து வரும் கலவத்தில் 191 பேர் பலியானதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவித்தாலும், உண்மையில் சாவு எண்ணிக்கை 1800 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரபூர்வமான அறிவிப்பில் சாவு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

உள்ளூர் நிர்வாகம் நிலைகுலைந்து போனதால் சாவு பற்றிய தகவலை யாரிடம் தெரிவிப்பது என்பதே தெரியவில்லை. மேலும் சில இடங்களில் குடும்பம் முழுவதும் இறந்து போனதால் அந்த சாவு பற்றி தெரிவிப்பதற்கு யாருமே இல்லாமல் போய் விட்டது

ர‌ஷ்யா, ஜெர்மனி, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மனிதாபிமான உதவிகளை அந்த நாட்டுக்கு அனுப்பி உள்ளன.