1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

நேபாள பிரதமர் மாதவ்குமார் ராஜினாமா

நேபாள பிரதமர் மாதவ்குமார் ராஜினாமா
நேபாள பிரதமர் மாதவ்குமார் தனது பத‌வியை ராஜினாமா செ‌ய்து‌ள்ளா‌ர்.

நேபாளத்தில் கடந்த 13 மாதங்களாக மாதவ்குமார் நேபாள், பிரதமர் பதவியில் இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட மாவோயிஸ்டுகள், தங்கள் தலைமையில் அனைத்துக்கட்சி தேசிய அரசு அமைப்பதற்காக, அவரை பதவி விலகும்படி வற்புறுத்தி வந்தனர்.

மாவோயிஸ்டுகளின் தலைமையை ஏற்க பிற கட்சிகள் விதித்த நிபந்தனையை மாவோயிஸ்டுகள் ஏற்கவில்லை.

இதனால் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மாதவ்குமார் நேபாள் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் முட்டுக்கட்டை நீங்கி ஒருமித்த கருத்து ஏற்படவே பதவி விலகுவதாக அவர் கூறினார்.