1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
  6. சிறையில் அடைக்கப்பட்டார் சரத் பொன்சேகா

சிறையில் அடைக்கப்பட்டார் சரத் பொன்சேகா

ஊழல் இராணுவ நீதிமன்றம் சிறிலங்க இராணுவம் சரத் பொன்சேகா அதிபர் ராஜபக்ச வெளிக்கடை சிறை
சிறிலங்க இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக அந்நாட்டு இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.

சரத் பொன்சேகாவிற்கு 36 மாத சிறைத் தண்டனை அளித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும், ஆனால் 30 மாதங்களாக சிறைத் தண்டனையை அதிபர் ராஜபக்ச குறைத்து பரிந்துரை செய்த்தாகவும் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியிலிருந்து சிறிலங்க கடற்படை தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகாவை இன்று காலை வெலிக்கடை சிறைக்கு கொண்டு வந்து அடைத்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பொன்சேகா கைதை படமெடுக்க திரண்டிருந்த ஊடகவியலாளர்கள், 12 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்துவிட்டு, பிறகு பெய்த கடும் மழையின் காரணமாக அங்கிருந்து வெளியேறிய பிறகு, பொன்சேகாவை வெலிக்கடை சிறைக்கு கொண்டு சென்று அடைத்துள்ளனர்.

மற்ற கைதிகளோடு அல்லாமல், சரத் பொன்சேகா தனியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.