1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
  6. ஒபாமா-தலாய் லாமா சந்திப்பு: சீனா கண்டனம்

ஒபாமா-தலாய் லாமா சந்திப்பு: சீனா கண்டனம்

பராக் ஒபாமா
புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்தித்ததற்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையிலான இருதரப்பு உறவில் ஒபாமா-தலாய் லாமா சந்திப்பு பின்னடைவை ஏற்படுத்தும் என சீனா ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் நேற்று தலாய் லாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சீன அயலுறவுத்துறை பேச்சாளர் விடுத்துள்ள இணையதள அறிக்கையில், ஒபாமா-தலாய் லாமா சந்திப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த சந்திப்புக்கு உறுதியான எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.