''கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் முடிவு எட்டப்படுவது கடினம்''
ஐ.நா சார்பில் நடைபெற உள்ள பருவநிலை மாநாட்டில் கரியமில வாயுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முடிவுகள் எட்டப்படுவது கடினம் என்று இந்தியா உள்ளிட்ட ஃபேசிக் நாடுகள் தெரிவித்துள்ளன.
ஃபேசிக் நாடுகள் என்று அழைக்கப்படும் பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா சார்பில் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாடு ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்றது.
இதில் கரியமில வாயுவை கட்டுப்படுத்த வளரும் நாடுகள் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா போன்ற வல்லரசு நாடுகள் கரியமில வாயுவை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று குற்றம்சாற்றப்பட்டது.
கரியமில வாயுவை கட்டுப்படுத்த ஏழை நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாக வல்லரசு நாடுகள் தெரிவித்ததை இதுவரை செயல்படுத்தவில்லை என்று இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
ஐ.நா.வின் சார்பில் மெக்சிக்கோவில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள பருவநிலை மாநாட்டில் எந்தவித முடிவும் எட்டப்படவாய்ப்பில்லை என்ற ஃபேசிக் நாடுகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே கியோட்டோ உடன்படிக்கை 2012ஆம் ஆண்டு நடைபெறுவதால் புதிய உடன்படிக்கை செய்ய உலக நாடுகள் முன்வருமாறு ஐ.நா. கூறியுள்ளது.