லண்டன் வந்த ராஜபக்சவை எதிர்த்து தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை அதிபர் ராஜபக்சவின் வருகையை எதிர்த்து லண்டன் விமானநிலையத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று இரவு 8 மணிமுதல் லண்டன் விமானநிலையத்துக்குள் வர ஆரம்பித்த தமிழ் மக்கள் 10 மணியளவில் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
ஆயிரத்துக்கும் அதிகமாக அங்கு கூடிய தமிழ்மக்களில் பலர் "ஸ்ரொப் ஜெனசைட்" என குறிக்கப்பட்ட மேலங்கிகளை அணிந்தவாறும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறும் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அங்கு கூடிய அதிகளவான காவல்துறையினருக்கு மத்தியிலும் அதிகளவானோர் தமது கரங்களில் தமிழீழ தேசியக் கொடியினை ஏந்தியவாறு
"போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ" , "சிறீலங்கா ஜனாதிபதி பயங்கரவாதி" "இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ", "சிறீலங்கா ஜனாதிபதி போர்க்குற்றவாளி" போன்ற கோசங்களை உரத்த குரலில் எழுப்பி விமானநிலையமே அதிரும் வண்ணம் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அனுமதியற்ற போராட்டமாக இருந்த போதும், அங்கு தேசியக்கொடிகள் பிடிக்கப்பட்டு உரத்தகுரலில் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோதும், அங்கு கூடிய காவல்துறையினர் எந்தவித இடையூறும் கொடுக்காததும், அதேபோல் போராட்டம் முடிவடையும் போது தமிழர்கள் பலர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துச் சென்றதோடு, அங்கு எதுவித அசம்பாவிதங்களோ, கைதுகளோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் போராட்டத்தினால், ராஜபக்சவை அதிகாரிகள் வேறுவழியாக வெளியே அழைத்து சென்றனர்.