1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

மலேசியாவில் இருந்து கொழும்பு சென்றார் பா‌ர்வ‌திய‌ம்மா‌ள்

மலேசியா
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து நேற்று மாலை இலங்கை வந்தடைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இந்தியா அவருக்கான அனுமதியை வழங்கவில்லை. இந்நிலையில் மலேசியா ஒரு மாதம் தங்குமிடம் ‌விசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது.

எனினும் பார்வதி அம்மாள் நேற்று மாலை யாரும் எதிர்பாராத வகையில் கொழும்பு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் தமிழ்நாட்டில் சிகிச்சை பெறுவதற்குரிய அனுமதியை பார்வதி அம்மாளுக்கு மத்திய அரசு நே‌ற்று அ‌ளி‌த்தது குறிப்பிடத்தக்கது.