1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
  6. சிறிலங்க அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி

சிறிலங்க அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி

சிறிலங்கா
சிறிலங்க அதிபர் தேர்தலில் பொன்சேகாவை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ச 57.88% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த சிறிலங்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.துவக்கம் முதலே ராஜபக்ச முன்னிலை வகித்தார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது அதிபர் தோ்தலின் அனைத்து மாவட்டங்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842,749 அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இத்தோ்தலில் மகிந்த ராஜபக்ச 6,015,934 (57.88 %) வாக்குகளை பெற்றுள்ளார்.இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185 (40.15 %) வாக்குகள் பெற்றுள்ளார்.

மகிந்த ராஜபக்ச 16 மாவட்டங்களிலும், எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா 6 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.