ஹைட்டி நிலநடுக்கம்: பல்லாயிரக்கணக்கில் உயிர்ப் பலி! 30 இலட்சம் பேர் பாதிப்பு!
வட, தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையிலான கடற்பகுதியில் உள்ள ஹைட்டி தீவு நாட்டைத் தாக்கிய பயங்கர நில நடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஹைட்டி நாட்டின் தலைநகர் போர்ட் ஆவ் பிரின்ஸின் தென்பகுதியை மையம் கொண்டு நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.23 மணியளவில்) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இது கடுமையான நிலநடுக்கமாகும்.
நிலநடுக்கத்தின் தாக்குதலில் ஹைட்டி தலைநகர் போர்ட் ஆவ் பிரின்ஸ் குலுங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான கட்டடங்களும், வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமானதாகவும், இதில் சிக்கி பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதாகவும் பல செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
தலைநகர் போர்ட் ஆவ் பிரின்ஸ் மட்டுமின்றி, மேற்கு மாகாணமும் கடும் பாதிப்பிற்குள்ளானதென அந்நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிப்பதாக பன்னாட்டுச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. தலைநகரின் மக்கட்தொகை 2,58,000 ஆகும். மேற்கு மாகாணத்தின் மக்கட்தொகை 22 இலட்சமாகும். மொத்தத்தில் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஹைட்டித் தலைநகரில் உள்ளத் தூதரகங்களில் பணியாற்றிய பல பணியாளர்கள் நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ளனர். இதனை ஜோர்டன், பிரேசில், சீன நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.ஐ.நா. அலுவலத்தின் 5 ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் அம்மக்களுக்கு உதவ முன்வந்துள்ளன. ஐ.நா. மீட்புப் பணிகளுக்கு உதவ சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.