லண்டனில் ராஜபக்ச நிகழ்ச்சி திடீர் ரத்து
லண்டன் வாழ் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து இலங்கை அதிபர் ராஜபக்ச நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
2வது முறையாக அதிபர் பொறுப்பை ஏற்ற அவர், இங்கிலாந்து சென்றுள்ளார். அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இலங்கையின் எதிர்காலம் குறித்து ராஜபக்ச உரை நிகழ்த்த இருந்தார்.
ஆனால் லண்டன் விமான நிலையத்திலேயே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அவரது நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
இதனிடையே போர் குற்றங்களுக்காக இங்கிலாந்து அரசால் கைது செய்யப்படலாம் என்பதால் அந்நாட்டிற்கு செல்வதை ராஜபக்ச தவிர்த்து வந்தார். ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்போவதில்லை என்று இங்கிலாந்து அரசு உறுதி அளித்ததன் பேரிலேயே ராஜபக்ச லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார்.
ராஜபக்ச வருகையை முன்னிட்டு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணையை தொடங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனிடம் அந்நாட்டு எம்.பி.க்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.