மியானமர்: ஒருவழியாக விடுதலையானார் ஆங் சான் சூ கி
நீண்ட காலமாக வேட்டுச் சிறையில் வாடிய மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கி ஒருவழியாக இன்று விடுதலையானார்.
மியான்மர் நாட்டில் 15 ஆண்டு காலம் வீட்டுக்காவலில் இருந்துள்ள தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூ கியின், தண்டனை நீட்டிப்பு காலம் நவம்பர் 13 ஆம் தேதியுடன் (இன்று) முடிவுக்கு வருவதால், அவரது விடுதலை உத்தரவில் ராணுவ ஜெனரல்கள் நேற்றுமுன்தினமே கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து சூகியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரது வீட்டு முன்னர் நேற்று முதலே திரண்டனர்.
இந்நிலையில் இன்று மாலை சூ கி வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்யபட்டதாக அரசு அதிகாரி ஒருவர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.
சூ கியின் விடுதலையையொட்டி, அவரது வீட்டு முன்னர் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும் திரண்டிருந்தனர்.
65 வயதாகும் சூ கி மியான்மரில் இருந்த 20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய அவர் மக்களிடையே செல்வாக்கு பெற்றார். இதனையடுத்து இராணுவ அரசு அவரை தொடர்ந்து சிறை வைத்துது.
இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்த, ஆங் சாங் சூ கி 1991 ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.