பணப்பெட்டியில் இந்த ஒரு பொருளை வைத்திருப்பதால் என்ன நன்மைகள்...?

Cash Box
Sasikala|
குபேரரை வசியம் செய்ய இந்த ஒரு பொருள் போதும். பணத்தை ஈர்க்கும் சக்தியானது எந்த பொருளில் எல்லாம் இருக்கின்றதோ அந்த பொருளில் எல்லாம்  நிச்சயமாக குபேரர் வாசம் செய்வார் என்பது உறுதி.
 

மஞ்சள் வகையில் அரியதாக கிடைக்கப்படும் ‘கருமஞ்சள்’ தான் அது. வடநாடுகளில் பல ஆண்டுகளாக இதை பண வருகைக்காக பயன்படுத்தி தான் வருகிறார்கள். ஆனால் அந்த ரகசியம் நமக்கு இதுநாள்வரை தெரியவில்லை. இப்போதெல்லாம் நம் தமிழ்நாட்டிலேயே இந்த கரு மஞ்சளானது நாட்டு மருந்து  கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. சற்று விலை அதிகம் தான். 
 
இந்த கரு மஞ்சளை, மஞ்சள் இழைக்கும் கல்லில் நன்றாக இழைத்து நெற்றியில் திலகமாக பூசிக் கொண்டு சென்றால் நாம் எதிர்பார்க்கும் பணவரவு கிடைக்கும்  என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கருமஞ்சள் காளிக்கும் மிகவும் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. 
 
ஜாதகரீதியாக ராகுவினால் உண்டாகும் பிரச்சினைக்கும், சனி பகவானால் உண்டாகும் பிரச்சினைக்கும் பரிகாரமாக கூட இந்தக் கரு மஞ்சளானது  பயன்படுத்தப்படுகிறது. இந்த மஞ்சளை கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறை கொண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும்.
 
வசூலாகாத பணம் வசூலாக வேண்டும் என்றாலும், இதை நம் கையோடு எடுத்துச் செல்லலாம். நீண்ட நாட்களாக வசூல் ஆகாமல் இருக்கும் கடன் தொகை கூட  வசூலாகிவிடும். நீண்ட நாட்களாக இருந்து வரும் கடன் பிரச்சனைகள் தீர, இதை பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். 
 
இந்தக் கரு மஞ்சளை சிகப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், எதிர்பாராத வெற்றிகள் நம்மை வந்து சேரும் என்றும் சாஸ்திரத்தில்  கூறப்பட்டுள்ளது. இந்த கரு மஞ்சளை சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும்  கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :