வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (17:16 IST)

முதல்கட்ட தேர்தலுக்குப் பிறகு மோடி பீதி..! ராகுல் காந்தி விமர்சனம்.!!

Modi Ragul
முதல்கட்ட தேர்தலுக்குப் பிறகு மோடி பீதி அடைந்துள்ளதாகவும், வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை  திசை திருப்பிதாகவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும், சில நாட்களாக நரேந்திர மோடி பதற்றத்தில் இருப்பது அவரது பேச்சில் இருந்து தெரிய வருகிறது என்று கூறினார்.
 
முதல்கட்ட தேர்தலுக்குப் பிறகு மோடி பீதி அடைந்துள்ளதாகவும், வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை மோடி திசை திருப்பிதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். 

 
ஒருநாள் சீனா அல்லது பாகிஸ்தானை பற்றி பேசுகிறார் மோடி, மறுநாள் சாப்பாடு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என்கிறார். 400 தொகுதிகளில் வெற்றி வெற்றி என்று கூறிக் கொண்டு இருந்த மோடி, தற்போது அந்த பேச்சையே கைவிட்டு விட்டார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.