வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (09:09 IST)

இனி வரிசையில் நிற்க வேண்டாம்.. மின்சார ரயில் டிக்கெட் எடுக்க செயலி அறிமுகம்..!

Chennai electric train
ஏற்கனவே மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மின்சார ரயிலில் பயணம் செய்யும் டிக்கெட் எடுக்கவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார ரயிலில் பயணம் செய்பவர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கும் நிலை உள்ள நிலையில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தற்போது யூடிஎஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மின்சார ரயிலுக்கான டிக்கெட்டுகளை வரிசையில் காத்திருக்காமல் எளிதில் ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்து கூட டிக்கெட்டுகளை பெற்று அதன் பின்னர் 2 மணி நேரத்திற்குள் ரயில் நிலையத்தை அடைந்து அந்த டிக்கெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டை எப்படி எடுக்க வேண்டும் என்பது வீட்டில் தற்போது பார்ப்போம்:

UTS செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும். மொபிஐ எண் கொடுத்து லாக் இன் செய்ய வேண்டும் . அதன்பின் எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். அதன்பின் டிக்கெட் க்யூ ஆர் கோடு முறையில் காட்டப்படும் டிக்கெட் மூலம் பயணம் செய்யலாம்.

Edited by Siva