வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (14:16 IST)

தாமரை கண்டிப்பாக மலரும்.. வாக்களித்த பின் கீர்த்தி சுரேஷ் அம்மா பேட்டி..!

கேரளாவில் கண்டிப்பாக தாமரை மலரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் அம்மா வாக்களித்த பின் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
கேரளாவில் இன்று காலை 7 மணி முதல் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் நீண்ட அரசியல் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அம்மா நடிகை மேனகா இன்று தனது கணவருடன் வாக்களிக்க வந்து அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
கடந்த 15 ஆண்டுகளாக கேரளாவில் இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன என்றும் கேரளாவில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்றும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
 
திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இருப்பினும் மக்கள் கையில் தான் வெற்றி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று கூறப்பட்டுள்ள நிலையில் கேரளாவில்  தாமரை மலரும் என்று கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran