1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heat wave will hit Tamil Nadu for 5 days..! Weather Center alert..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்..! வானிலை மையம் எச்சரிக்கை..!

வெப்பம் அதிகரிக்கும்
வருகிற 30-ஆம் தேதி வரை வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
 
26.04.2024 முதல் 29.04.2024 வரை: 
 
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
30.04.2024 மற்றும் 01.05.2024: 
 
மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 
 
26.04.2024 முதல் 30.04.2024 வரை:
 
தமிழக உள்  மாவட்டங்களில்  அடுத்த ஐந்து  தினங்களில்  அதிகபட்ச   வெப்பநிலை 2°  செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
 
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
 
ஈரப்பதம்: 
 
26.04.2024 முதல் 30.04.2024 வரை:
காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். 
 
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 
 
26.04.2024 முதல் 30.04.2024 வரை: அடுத்த ஐந்து  தினங்களில் வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
வெறுப்புக்கு எதிராக வாக்களித்துவிட்டேன்..! வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி.!!