1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2024 (18:13 IST)

எவ்வளவோ வெயில் பாருங்க.. வெறும் தரையில் ஆம்லேட் போட்ட ஆசாமிகள்! பிடித்து சென்ற போலீஸ்!

Omlete in sun light
சேலத்தில் வெயில் அதிகரித்ததை காட்டுவதற்காக கலெக்ட் ஆபிஸ் முன்பு வெறும் தரையில் முட்டையை ஊற்றி ஆம்லேட் போட முயன்ற நபர்களை போலீஸார் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. சேலம், வேலூர் மாவட்டங்கள் சாதாரணமாகவே அனல் பறக்கும். வெயில் காலம் என்றால் சொல்லவே வேண்டாம். தற்போது தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் ஆரஞ்சு அலெர்ட் மாவட்டங்களில் சேலமும் உள்ளது.

இதனால் பொதுமக்கள் நடு மதிய நேரங்களில் அவசியமின்றி வெளியே திரிய வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் முட்டைகளோடு வந்த இரண்டு ஆசாமிகள் ஆட்சியர் அலுவலக முகப்பில் வெறும் தரையில் முட்டையை ஊற்றி அது வெந்து போவதை காட்டி வெப்பநிலை அதிகரித்திருப்பது குறித்து ஏதோ பேசியுள்ளனர்.


அங்கு வந்த போலீஸார் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதாக இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனரெ. பின்னர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி திரும்ப அனுப்பியுள்ளனர்.

சமீபமாக பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகமாகி வருவதால் பலரும் இதுபோல தார் சாலையில் முட்டையை ஊற்றி வேகவிட்டு காட்டுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கவன ஈர்ப்புக்காக ஆசாமிகள் இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K