நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்ததா வாட்ஸ்அப்?
பயனர்களின் தகவல்களை கேட்டு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று வாட்ஸ் அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் உரையாடல் என்பது இரு பயனர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உரிமை என்றும் அதை வாட்ஸ் அப் நிர்வாகம் கூட பார்க்க முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவேதான் பாதுகாப்பு காரணமாக வாட்ஸப் மூலம் பல தகவல்களையும் டாக்குமென்ட்களையும் பயனர்கள் அனுப்பி வருகின்றனர் என்பதும் இதனால் உலகம் முழுவதும் வாட்ஸப் சமூக செயலிக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவின் புதிய தொழில்நுட்ப விதிகளின்படி, குற்ற வழக்குகளின் விசாரணைக்காக அரசு கேட்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் உரையாடல் தகவல்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால் பயனர்களின் தனி உரிமையை பாதிக்கும் வகையில் இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேறி செயலியையும் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் வாதம் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva