திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (17:20 IST)

4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு..!!

airport
சென்னை உட்பட 4 விமான நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என கொல்கத்தா விமான நிலையத்துக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து  4 விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, விமான பயணிகள் உடைமைகள், விமானங்களில் ஏற்றப்படும் பார்சல் உள்ளிட்டவைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களுக்கு பயணிக்க வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

 
இதனால், சோதனை நேரமானது அதிகரிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.