வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (14:40 IST)

3.2 ஓவர்கள், 7 விக்கெட்டுகள் ஒரு ரன் கூட இல்லை: டி20 போட்டியில் சாதனை செய்த வீராங்கனை..!

இந்தோனேசிய நாட்டின் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் 3.2 ஓவர்கள் வீசி ஏழு விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் என்பதும் அவர் அதுவரை ஒரு ரன் கூட வழங்காமல் இருந்தது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

இந்தோனேசிய நாட்டில் தற்போது தான் கிரிக்கெட் போட்டி ஓரளவுக்கு பிரபலமாகி வருகிறது என்பதும் கிரிக்கெட் ரசிகர்களும் அதிகமாகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டின் மகளிர் அணிக்கும் மங்கோலியா நாட்டின் மகளிர் அணிக்கும் டி20 போட்டி சமீபத்தில் நடந்த நிலையில் அதில் இந்தோனேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் 17 வயது ரோமாலியா என்ற வீராங்கனை மிக அபாரமாக வந்த வீசி 3.2 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்

அவர் படைத்தது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மிகப்பெரிய சாதனை என்றும் அவருடைய சாதனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Edited by Mahendran