சுண்டைக்காய் சாப்பிடுவதன் அற்புத மருத்துவ பயன்கள்!

சர்வ சாதாரணமாக வீடுகளிலும், காடுகளிலும் வளர்ந்து கிடக்கும் சுண்டைக்காய் டாக்டர் பீஸை மிச்சப்படுத்தும் பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.

Various Source

காடுகளில் தானாகவே வளர்வதை மலை சுண்டைக்காய் என்றும், வீட்டு தோட்டங்களில் வளர்ப்பதை பால் சுண்டைக்காய் என்று பிரிக்கின்றனர்.

சுண்டைக்காயில் வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்பு சத்து, கால்சியம் சத்து ஆகியவை அதிகளவில் உள்ளன.

ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும்.

சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து வயிறு சுத்தமாகும்.

மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும்.

புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து.

சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

Various Source