1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (16:47 IST)

எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறைந்த உச்சநீதிமன்றம்.! விவிபாட் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி விமர்சனம்..!!

PM Modi
விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
 
பிஹார் மாநிலம் அராரியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து குறைகூறி வந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் இன்று கடுமையாக அறைந்துள்ளது உச்ச நீதிமன்றம் என்றார். 
 
அவர்கள் எல்லோரும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் நமது ஜனநாயகம் மற்றம் தேர்தல் முறை குறித்து உலகமே பாராட்டி வரும் வேலையில், அவை குறித்து சொந்த நலனுக்காக எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.
 
மேலும், “காங்கிரஸ் கட்சி பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க தீவிரமான சதியில் ஈடுபட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
இந்தியாவில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மிகவும் தெளிவாக பாபா சாகேப் அம்பேத்கர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆனால், காங்கிரஸ் கட்சியோ மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது என்று விமர்சித்தார்.


அது, அக்கட்சி ஆளும் கர்நாடகாவில் உள்ள இடஒதுக்கீடு மாதிரியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற எதிர்க்கட்சிகள் தங்களால் ஆன அனைத்தையும் செய்கிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.