1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (08:38 IST)

தன்னுடைய அடுத்த படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட சீனு ராமசாமி!

மாமனிதன் திரைப்படத்துக்குப் பிறகு ஜி வி பிரகாஷ் நடிப்பில் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் வயதான கெட்டப்பில் முதல் முறையாக யோகி பாபு நடிக்கிறார்.

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் ஏகன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளார். அதில் “நான் இயக்கிய கோழிப் பண்ணை செல்லதுரை படத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அர்ப்பணிப்போடு நடித்து என் இதயத்தில் பிள்ளை போல் நிறைந்த அறிமுக நாயகன். கலைச்செல்வன் ஏகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.” எனக் கூறியுள்ளார்.