ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:35 IST)

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்: பிசிசிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் புகார் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக குற்றச்சாட்டு கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
போட்டிகள் முடியும் தருவாயில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, முன்பே நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும்  என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு  புகார் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
 
இந்த நிலையில் கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva