தொடர்புடைய செய்திகள்
- அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்0காததால் தான் அரசு பேருந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது- போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
- தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த 7 கைது!
- ரூ.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!
- சென்னையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்.. பெண் ஐடி ஊழியர் உட்பட இருவர் கைது..!
- மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ரூ.50,000க்குள் வருமா?
சென்னையின் முக்கிய பகுதியில் 3 மாதத்திற்கு போக்குவரத்து மாற்றம்.. ஒருவழிப்பாதையாக செயல்படும்..!
சென்னையின் முக்கிய பகுதியில் தென்னக ரயில்வே துறை சார்பாாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தெற்கு ரயில்வே துறை சார்பாாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 26) இரவு 10 மணி முதல் 3 மாத காலத்துக்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக செயல்பட உள்ளது.
அதன்படி ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்த வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக ரிசர்வ் வங்கி சுங்கப்பாதை அணுகு சாலை, வடக்கு கோட்டை சாலை, (என்எஃப்எஸ் ரோடு), ஆர்ஏ மந்திரம், முத்துசாமி சாலை, டாக்டர் முத்துசாமி பாலம், வாலாஜா பாயிண்ட் கொடி மரசாலை, போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம்போல் இயக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva
