குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்க கூடாது ஏன்..?

Kula Deivam
Sasikala|
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வ அருள் இல்லாமல் நமது வாழ்க்கையில் ஒரு நொடி கூட வாழ இயலாது. எத்தனை  தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாக காணப்பட்டாலும், மற்ற தெய்வங்களை விட குல தெய்வத்திற்கே சக்தி அதிகம். நாம் பல தெய்வங்களை வழிபாடு  செய்தாலும் அவை அனைத்தும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே நமக்கு அருளினை வழங்க முடியும்.
 
நாம் குலதெய்வ கோயிலிற்கு சென்று வழிபடும்போது, நம் முன்னோர்வழி வந்த அத்தனை புண்ணிய ஆத்மாக்களும் நமக்கு அருள் புரிவதோடு நமக்கு ஆபத்து  நேரும் காலத்தில் அந்த சக்தி நம்மை ஒரு கவசம் போல காக்கும்.
 
குலதெய்வத்திற்கு பூஜை செய்யாத ஒருவர் தங்களது இஷ்ட தெய்வத்தை எவ்வளவு தான் வழிபட்டாலும் அவர்களுக்கு பலன் கிடைக்காது. ஆகையால் எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.
 
குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். குல தெய்வ வழிபாட்டில் சைவ  வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது.
 
கிராமங்களில் இன்றும் குல தெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்படுவது தொடர்ந்து நடக்கிறது. குல தெய்வ வழிபாட்டில் கன்னிமார்  தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.


இதில் மேலும் படிக்கவும் :