ட்ரம்ப்புக்கு அடுத்த கட்ட கொரோனா பரிசோதனை ! முடிவுகள் வெளியானது

corono
நட்பு நாடுகளுக்கு உதவ 10 நாளில், 1 லட்சம் வென்டிலேட்டர்கள் – அதிபர் டிரம்ப்
Last Modified வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (10:25 IST)

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஏற்கனவே முதல்கட்ட கொரோனா சோதனைகள் செய்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட சோதனைகள் செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.

உலகளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இதுவரை 2.36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 5000 க்கு மேல் உள்ளது. அங்கு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு இன்னும் வரும் நாட்களில் அதிகமாகும் என்றும் வலி மிகுந்த நாட்களுக்குத் தயாராகுங்கள் என்றும் அமெரிக்க மக்களிடம் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வந்து சென்றவர்களில் பலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.
இரண்டு கட்டமாக செய்யப்படும் சோதனையில் முதல் கட்ட சோதனையில் அவருக்கு நெகட்டிவ் என வர இரண்டாம் கட்ட சோதனை தற்போது செய்யப்பட்டது. அதிலும் முடிவு நெகட்டிவ் என வந்துள்ளதால் இப்போது அவருக்கு கோரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :