1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2024 (18:15 IST)

மே6ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை .. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Holiday
திருச்சி மாவட்டத்திற்கு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அந்த மாவட்டத்தின் ஆட்சி தலைவர் சற்று முன் அறிவித்துள்ளார். 
 
உள்ளூஉரில் நடைபெறும் விசேஷங்களை கணக்கில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்படும் என்பதும் அதற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்து வருவார் என்பதும் தெரிந்தது. 
 
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் மே 6ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் 
 
அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளியில் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran