ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (18:47 IST)

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஏப்ரல் 27 முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் பத்து குக்குகள் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொதுவாக நிகழ்ச்சி தொடங்கும் முதல் நாளில் தான் ஒவ்வொரு குக்குகளாக அறிமுகப்படுத்தப்படும் நிலையில் இந்த சீசனில் வித்தியாசமாக முன்கூட்டியே பார்த்து குக்குகளின் பெயரை அறிவித்த விஜய் டிவி இது குறித்த வீடியோவையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள போகும் 10 குக்குகள் பெயர்கள் இதோ:
 
1. இர்பான் - யூடியூபர்
 
2 . வசந்த் - சீரியல் நடிகர்
 
3. பிரியங்கா - விஜய் டிவி தொகுப்பாளினி
 
4. விடிவி கணேஷ் - திரைப்பட நடிகர்
 
5. சுஜிதா - சீரியல் நடிகை
 
6. ஷாலினி ஜோயா - நடிகை
 
7. அக்சய் கமல் - சீரியல் நடிகர்
 
8. திவ்யா துரைசாமி - நடிகை
 
9. ஸ்ரீகாந்த் தேவா  - இசையமப்பாளர்
 
10. பூஜா - சூப்பர் சிங்கர் பாடகி. 
 
Edited by Mahendran