திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (12:27 IST)

விஜய், கவின் நடிகைக்கு திருமணம்.. மஞ்சும்மெல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்தார்..!

விஜய் நடித்த 'பீஸ்ட்’ மற்றும் கவின் நடித்த டாடா படங்களில் நடித்த நடிகை அபர்ணாதாஸ் திருமணம் இன்று நடைபெற்றதை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
தமிழில் ’பீஸ்ட்’, ‘டாடா’ படங்களிலும் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்த நடிகை அபர்ணாதாஸ்,  மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். 
 
இருவருக்கும் கடந்த மூன்றாம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று கேரளாவில் முறைப்படி திருமணம் நடந்தது என்பதும் இந்த திருமணத்தில் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
திருமண பொருத்த புகைப்படங்களை நடிகை அபர்ணாதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருவதோடு ரசிகர்கள் என்ற தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran