1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:12 IST)

தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளை!மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையத்தில் விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் மனு.

கோவை செல்வபுரம் அருள் கார்டனைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் அதே பகுதியில்  தங்க நகை தொழில் செய்து வருகின்றனர்.
 
இருவரும்   கோவையிலிருந்து விழுப்புரத்திற்கு தங்க நகைகளை எடுத்து சென்று அங்கு உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்வதை  வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் ஆகிய இருவரும்  இருசக்கர வாகனத்தில் தங்க நகைகளோடு  செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் சென்று கொண்டுள்ள போது,   பொழுது மர்ம நபர்கள் அரிவாளால் இருவரையும் தாக்கி,  470 கிராம் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
 
சுமார் 25 இலட்சம் மதிப்புடைய தங்க நகைகளை  கொள்ளையடித்து சென்ற இச் சம்பவம் தங்க நகை தொழிலாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடிபட்ட குற்றாவளிகளை  விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பாக மாநகர காவல் ஆணையரிடத்தில் மனு வழங்கப்பட்டது.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின்   தேசிய பொதுச்செயலாளர் விஸ்வகர்மா ஜெகத் குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் பாபுஜி சுவாமிகள்...
 
தொடர்ந்து இது போன்று தங்க நகை தொழிலாளிகளிடம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், இதனால் தங்க நகை தொழிலாளிகள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்த அவர்,மாநகர காவல் துறை கோவையில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.