சப்பாத்தி ஏற்ற சுவையான டால் எப்படி செய்வது...?

Chapati Dal
Sasikala|
தேவையான பொருட்கள்: 
 
பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 1 
தக்காளி - 1 
பச்சைமிளகாய் - 3 
கடுகு  - சிறிதளவு 
சீரகம் - சிறிதளவு 
காய்ந்த மிளகாய் - 1 
கறிவேப்பிலை - சிறிதளவு 
கொத்தமல்லி - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - சிறிதளவு 
நெய்  - சிறிதளவு 

செய்முறை: 
 
ஒரு குக்கரில் ஊறவைத்த பாசிப்பருப்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை போட்டு அதனுடன் தக்காளி, பச்சைமிளகாய் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நன்றாக வேகவைக்க வேண்டும். 
 
நன்றாக 4 விசில் வரை வெந்தவுடன் உப்பு சேர்த்து நன்றாக கடையவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் சீரகம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கடைந்த தாளில் ஊற்றவும். 
 
தாளித்த பொருட்களை தாளில் ஊற்றியதும் சுவையான டால் தயார். இதனை அனைத்து டிபன் வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.


இதில் மேலும் படிக்கவும் :