வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (20:35 IST)

ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்.! பெண் தோழியுடன் வாலிபர் கைது..!!

Spiderman
டெல்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
டெல்லியில் துவாரகா மெட்ரோ ஸ்டேஷனில் சூப்பர் ஹீரோ உடை அணிந்து வரும் பெண் ஒருவர் ஸ்பைடர் மேன் உடையணிந்து வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருப்பவருடன் செல்கிறார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் கைகளை உயர்த்தியபடி செல்கின்றனர்.
 
இதுதொடர்பான விடியோவை அவர்கள் இன்ஸ்டாவிலும் பதிவிட்டனர். இந்த வீடியோ 9.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 77,000 க்கும் மேற்பட்ட 'லைக்குகளையும்' பெற்று இணையத்தில் வைரலானது.
 
தலைக்கவசம், ஓட்டுநர் ஒரிமம், பக்கவாட்டு கண்ணாடிகள், நம்பர் பிளேட் என எதுவும் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதாக அவர்கள் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீசார், "ஸ்பைடர்மேன்" ஆதித்யா (20), மற்றும் அவரது தோழி "ஸ்பைடர்-வுமன்" அஞ்சலி (19) ஆகியோரை இன்று கைது செய்தனர். 

 
மேலும் அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.