காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்...!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி சொந்த வீடு கட்டுவதற்கு காலி மனை வாங்க வேண்டியது அவசியம். 
வாஸ்து சாஸ்திரத்தின் படி எப்படி பட்ட மனைகளை வாங்குவது சிறந்தது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். புதிதாக வீடு அல்லது  இன்ன பிற கட்டிடங்கள் கட்டுவதற்காக காலி மனைகளை நமது பொருளாதார வசதிக்கு ஏற்றவாறே அமைகிறது. 
 
புதிதாக வீடு கட்டுவதற்காக வாங்கும் நில மனைகளை வாங்கும் போது வாஸ்து சாஸ்திர விதிககளை பின்பற்றுவதால் நலம் உண்டாகும்.  நான்கு பக்கங்களும் சதுரமாக இருக்கும் வீட்டு மனை முதல் தரமான மனையாகும். இப்படிப்பட்ட மனைகளில் வீடு மற்றும் இன்ன பிற  கட்டிடங்களை கட்டி அதில் வசிப்பவர்கள் எல்லாவிதமான நன்மைகளும் பெறுவார்கள். 
செவ்வக வடிவிலான வீட்டு மனை அவ்வளவு சிறப்பான மனை என்று கூற முடியாவிட்டாலும், பாதகமான பலன்களை தராது என்பது உறுதி.  இத்தகைய செவ்வக மனைகளில் கட்டப்படும் வீடுகளில் அரசாங்க ஊழியர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களுக்கு நன்மைகளை  ஏற்படுத்தும். 
 
வாஸ்து சாஸ்திரத்தில் மக்கள் வசிப்பதற்கு சதுரம் மற்றும் செவ்வக வடிவிலான மனைகளே சிறந்தவை என கூறப்பட்டுள்ளது. செவ்வக  வடிவத்தின் உதாரண அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
 
நீளம் அதிகமாகவும், அகலம் குறைவாகவும் இருக்கும் மனைகள் பாம்பு மனைகள் என அழைக்கப்படுகின்றன. பாம்பு மனைகளில் கட்டப்படும்  வீடுகளில் வசிப்பவர்களுக்கு திடீர் விபத்துகள், திருடர்கள் தொல்லை, தீரா நோய்கள், வழக்குகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படும்.


இதில் மேலும் படிக்கவும் :