ஜகமே தந்திரம் திரைப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுங்க – தியேட்டர் அதிபர் வேண்டுகோள்!

Last Modified திங்கள், 2 நவம்பர் 2020 (11:37 IST)

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று அமேசான் ப்ரைம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தனுஷ் தயாரிப்பாளரிடம் ’படத்தை திரையரங்கம் திறந்தவுடன் ரிலீஸ் செய்துகொள்ளலாம். அதனால் உங்களுக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் இன்னொரு படத்தில் நடித்துத் தருகிறேன்’ என வாக்குறுதி கொடுத்துள்ளாராம் அதனால் எவ்வளவு தாமதமானாலும் திரையரங்கிலே ரிலிஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் காத்திருக்கிறார்.

இந்நிலையில் நவம்பர் 10 முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் ரோகினி திரையரங்க உரிமையாளர் ‘ஜகமே தந்திரம் படத்தை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும். ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு ஈர்க்க சரியான திரைப்படமாக இருக்கும்.
50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்பது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :