மாஸ்டர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறதா? தயாரிப்பாளர் விளக்கம்!

Papiksha Joseph| Last Updated: புதன், 5 ஆகஸ்ட் 2020 (08:05 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களோடு சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் என கூறப்பட்ட நிலையில் அமேசான் நிருவனம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திரதினத்தை முன்னிட்டு
மாஸ்டர் படம் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தனர். இது தீயாக பரவ அனைவரும் குழப்பம் அடைந்தனர் .

இந்நிலையில் இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம்
7 ஸ்கிரீன் நிறுவனம் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது. அதில், "அது 2016ல் வெளிவந்த கொரியன் படம் 'மாஸ்டர்'. அதை தான் அமேசான் ப்ரைம் குறிப்பிட்டு இருக்கின்றனர். அது தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் அல்ல. மாஸ்டர் நிச்சயம் தியேட்டரில் பிரம்மாண்டமாக வெளியாகும்" என குறிப்பிட்டு தெளிவுப்படுத்தியுள்ளனர்.



இதில் மேலும் படிக்கவும் :