வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (13:34 IST)

வெறுப்புக்கு எதிராக வாக்களித்துவிட்டேன்..! வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி.!!

Prakash Raj
வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன் என்றும் நீங்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில்  முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். நீங்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்களிப்பது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
இந்த தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறவர்கள் தான் நம்முடைய எதிர்காலத்தை முடிவு செய்பவர்கள் என்று அவர் கூறியுள்ளார். உங்கள் தலைவரை, உங்கள் பிரதிநிதியை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.