திருமணம் தேதியை அறிவித்தார் ரானா...! அதுவும் லாக்டவுனில் தானா...?

Papiksha Joseph| Last Modified செவ்வாய், 2 ஜூன் 2020 (16:18 IST)

பாகுபலி படத்தை எடுத்தவர்களும் அதில் நடித்தவர்களும் மறந்தாலும் ரசிகர்கள் அதை மறக்க மாட்டார்கள். எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில், அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த நடிகார் ராணா சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை அறிமுக செய்தார்.

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர் ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் திருமண நிச்சயம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியது . இதற்கிடையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சமீபத்தில் ராணா - மஹீகா பஜாஜ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகி போட்டோக்கள் வைரலானது. அந்த விசேஷத்தில் நடிகை சமந்தா - நாகசைதன்யா கூட கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தற்போது ராணாவின் தந்தை சுரேஷ் பாபு பேட்டி ஒன்றில் மகனின் திருமணத்தை குறித்து பேசுகையில், வருகிற
ஆகஸ்ட் 8-ந் தேதி ராணாவின் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனவால் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி தான் இந்த திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை ஊரடங்கில் தளர்வு ஏற்படவில்லை என்றால் நிச்சயதார்த்தை போலவே நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் சிம்பிளாக இந்த திருமணம் நடைபெறும் என டோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :