முருகன் தமிழ்கடவுள்னா.. விநாயகர் இந்தி கடவுளா? – திருமாவளவன் பேச்சால் சர்ச்சை

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 8 ஜனவரி 2021 (13:32 IST)
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறித்து திருமாவளவன் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் கடவுளான முருகனுக்கு சிறந்த நாளான தைப்பூசத்தை அரசு விடுமுறையாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தங்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அறிவித்ததாக நன்றி தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இந்த விடுமுறை அறிவிப்பு குறித்து பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் ”முருகன் மட்டும் தமிழ் கடவுள் என்று சொல்லி தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்துவிட்டால் தமிழர்களாக நாம் தலைநிமிர்ந்து விடுவோமா? முருகன் தமிழ் கடவுள் என்றால் அவரது அண்ணன் விநாயகர் என்ன இந்தி கடவுளா? எல்லாம் ஓட்டுக்காக!” என கூறியுள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :