1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2024 (08:46 IST)

‘ரெடி ஜூட்’… வீர தீர சூரன் பட ஷூட்டிங்கைத் தொடங்கிய விக்ரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா என்ற முக்கியமானப் படத்தைக் கொடுத்த இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. மேலும் படத்தின் தலைப்பு ‘வீர தீர சூரன்’ எனவும் அறிவிக்கப்பட்டு படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள விக்ரம் “ரெடி ஜுட்” எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.