வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

ஸ்ட்ரீட் கிரிக்கெட் போல விளையாடிய பஞ்சாப் & கொல்கத்தா… நேற்றைய போட்டியில் உடைக்கப்பட்ட பல டி 20 சாதனைகள்!

ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டி 20 வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 261 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்களும் பிலிப் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்களும் சேர்த்தனர்.

இந்த கடின இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் அணியும் வாங்கிய அடிக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். பிரபுஷிம்ரான் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  மற்றொரு தொடக்க வீரரான ஜானி பார்ஸ்டோ 48 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசன் முழுவதும் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடும் ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்களை சேர்க்க 8 பந்துகள் மீதம் இருக்க பஞ்சாப் அணி இலக்கை எட்டியது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் பல டி 20 கிரிக்கெட் சாதனைகள் உடைக்கப்பட்டன. அவற்றில் சில…
  • டி 20 போட்டிகளில் துரத்தி எட்ட பட்ட மிக அதிக இலக்கு
  • டி 20 போட்டிகளில் இரு அணிகளும் சேர்ந்து சேர்த்த மிக அதிகபட்ச ஸ்கோர்
  • டி 20 போட்டிகளில் ஒரு அணி அடித்த அதிக சிக்ஸ்கள்(பஞ்சாப் 24 சிக்சர்கள்)
  • இரு அணிகளும் சேர்ந்து அடித்த அதிக சிக்சர்கள் (42)